Thursday, December 31, 2009



இன்று இந்த வருடத்தின் கடைசி நாள்
வருடம் தொடங்கியதுமுதல் இன்று வரை
பரிமாறிய வார்த்தைகள், வாதங்கள்
அளவிடமுடியாத வானமாய்,
சேர்ந்த காதல்கள் மலர்ந்த பூக்களாய்,
மனத்தில் புதைந்த காதல்கள் மலராத மொட்டாய்
இந்த வருடத்தில் அதிகமான நேரத்தை செலவிட்ட
அலுவலகத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும்
இந்த சந்தோஷமானவாழ்க்கைக்கு நன்றி சொல்லி
மனதில் நினைத்துப்பார்க்கவேண்டிய நன்னாள்
வாழ்க தமிழ் வாழ்க நீயும்!

சுகந்தன்

Thursday, December 24, 2009

Wednesday, December 23, 2009

ஏன் பிறந்தாய்



பெண்ணே நீ ஏன் பிறந்தாய் என்பது உனக்கு தெரியுமோ
தெரியாதோ எனக்கு தெரியும்
ஏன் என்கிராய்யோ தெரிந்துகொண்டே
சொல்கிறேன் வேறென்ன உயிரோடு என்னை கொள்வதர்க்காகதான்

வருத்தம்



நான் பறித்த பூக்களில் இருந்து

சிதறிய இதழ்கள் வருத்தப்படுகிறது

அந்த பூக்கள் உன்னுடன் சேரும்போது!

Tuesday, December 22, 2009

பிடிக்கும்




நிலவு பிடிக்கும்
நிலவைப்போல் உள்ள வெண்மை பிடிக்கும்
வெண்மைபோல் உள்ள பனித்துளி பிடிக்கும்
பனித்துளிபோல் உள்ள மழைத்துளி பிடிக்கும்
மழைத்துளிபோல் உள்ள தூய்மை பிடிக்கும்
தூய்மையான உன் மனம் பிடிக்கும்
உன்னுடன் பேசும்போது இதயம் துடிப்பது பிடிக்கும்
வேகமாய் கடந்து செல்லும் உன் பார்வை பிடிக்கும்
தும்மளின்போது உன்னை நினைக்க பிடிக்கும்
சொல்லம்றந்துவிட்டேன் உன்பெயரை முதலில்