
நட்பு வாழ்க
விடியல் நாம் சந்தித்த நாள்!
பரிமாறிய உணவு, பரிமாறிய காதல் கதைகள்
இரவு நிலா, நட்சத்த்திரம், மொட்டை மாடி நாம் தூங்க உதவும் மடி
அது சொல்லும் நம் மனதில் ஏற்பட்ட வலி! சந்தோஷத்தை!
நெல்லி, கொய்யா, தென்னை நமக்காக காய்த்து குலுங்கும்!
நான்கு பேர் இருக்கும் இடம் அதில் தெறிந்த கால்கள் மட்டும் இருபது
ஊருக்கு சென்று வரும் நாள் திருநாள்
தனக்கு தெரியாமல் தன் தாய் வைத்திருக்கும் பல(காரம்) இனிப்பு
எனக்கு தெரியாமல் திருடி தின்னும் கிருஷ்ணர்கள் பலர்
தன் காதலியை சந்திக்க என் நண்பனுக்கு காவலனாய் நான்
எனக்கு காவலனாய் இருந்த மரத்தடி நிழல் சொல்லும்!
நைட் ஷோ டிக்கெட் சொல்லும் நாம் பின்பக்கம் திருட்டுத்தனமாய் ஏறிவந்த நாட்க்களை
சூரியன்,நிலா, நட்சத்த்திரம் அனைத்தும் ஏங்கியது மனிதராய் பிறக்க நம் நட்பை பார்த்த பிறகு
பிரிவாம் கடைசி நாள் அன்று கூட நாம் அழவில்லை ஆம்
இந்த உலகில் எங்கு இருந்தாலும் நட்பெனும் போர்வைக்குள்
வாழ்க வழமுடன்!!!!!!