
எங்கள் கண்ணீரும் எங்கள் வார்த்தையும், உங்கள் கல்லரையின்மேல் முட்களில்லாத ரோஜாவாகட்டும்...
பாதம் மட்டும் தொட்ட பூமி,
மனிதன் பாதம் மட்டும் தொட்ட பூமி,
இன்று ரத்தம் தொட்டு
மனிதன் ரத்தம் தொட்டு...
பாவப்பட்ட தமிழா ,
சிங்களம் இன்று பாவப்பட்டதோ தமிழா,
காதல் கொண்ட பூமி
மனிதன் தோன்றும்போதே காதல் கொண்ட பூமி
இன்று பிரேதம் பார்த்து...
மனிதன் பிரேதம் பார்த்து...
.
.
.
தாய் இழந்த குழந்தை
குழந்தை இழந்த தாய்
கணவன் இழந்த மனைவி
மனைவி இழந்த கணவன்
வீடு இழந்த மனிதன்
மனிதன் இல்லா வீடு...
வானம் பார்த்திடாத தமிழச்சி
இன்று வானம் மட்டும் பார்த்தபடி !!!
நரகமே என்றாழும் அது
எங்கள் நகரம் போல் இருக்ககூடாது…
கடல் நீரும் பயப்படுகிறது
எங்கள் கண்ணீரை கண்டு…
ராவணன் இருந்தால் கூட யோசித்திருப்பான்
சீதையை அங்கே சிறை வைக்க....
இந்த வார்த்தை மட்டும் ஆறுதல் படுத்தாது
இணைந்து போராடுவோம்
இணைந்து குரல்கொடுப்போம்...
வலிமை சேர்க்க வாருங்கள் தோழர்களே
மனம் உருகி
No comments:
Post a Comment